மோடி தலைமையில் ராணுவ குழு?.. பாக். மீது அமெரிக்க உளவுத்துறை குற்றச்சாட்டு
- பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, ராணுவ நடவடிக்கைகள் மூலம் பதில் அளிக்கவே வாய்ப்பு அதிகம் என அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.
- அமெரிக்க உளவுத்துறை ஆண்டுதோறும், அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.
- அந்தவகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரச்சனைகள் கவலைக்குரியவை என கூறப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு எதிரான ராணுவ குழுக்களை ஆதரிக்கும் நீண்ட வரலாறு பாகிஸ்தானுக்கு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதேநேரத்தில், கடந்த காலங்களை விட பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என கருதப்படும் செயல்பாடுகளுக்கு அல்லது உண்மையாகவே ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு, ராணுவம் மூலம் பதிலளிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story