போனை திருடி திருடி போர் அடிச்சிடுச்சு..அதான் போன் டவரையே திருடிட்டோம்" - "ஹேய் எப்புடுறா".. மிரண்டுபோன உரிமையாளர்
பாட்னாவில் 19 லட்சம் ரூபாய் மதிப்புடைய மொபைல் டவரை மர்ம கும்பல் திருடிச் செய்துள்ளது. டவர் இருந்த இடத்தின் உரிமையாளரை நாடிய திருட்டு கும்பல், தாங்கள் டவர் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், நஷ்டம் காரணமாக டவரை அகற்றப்போவதாகவும் கூறியிருக்கிறது. உரிமையாளரும் அதனை நம்ப, கொள்ளை கும்பல் மூன்று நாட்களாக இரவு பகல் பாராது டவரை கட் செய்து தூக்கிச் சென்றுவிட்டது. இதுதொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே பீகாரில் ரெயில் எஞ்சின் திருடப்பட்ட அதிர்ச்தி மறைவதற்கு மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக மொபைல் டவர் திருடப்பட்டது வெளியாகியிருக்கிறது.
Next Story