அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு... நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..
அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு... நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்..
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக்குறைவால் கடந்த 17 ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்து அவரது சகோதரர் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், தியாகராஜன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story