ஜெயித்தும் கைகொடுக்காத "லக்"..பரிதாபமாக வெளியேறிய மெக்சிகோ - உலகக்கோப்பை கால்பந்து

x

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவில் அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் மோதின.

முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 46-வது நிமிடத்தில், அர்ஜெண்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை அடித்தார்.

இதையடுத்து 67-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரேஸ் அடுத்த கோலை அடித்தார்.

இறுதியாக இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் போலந்தை அர்ஜெண்டினா வீழ்த்தியது.

எனினும் 'சி' பிரிவில் 6 புள்ளிகள் பெற்ற அர்ஜெண்டினா மற்றும் 4 புள்ளிகள் பெற்ற போலந்து ஆகிய 2 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவில் சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியின் 47 மற்றும் 52-வது நிமிடங்களில், மெக்சிகோ வீரர்கள் ஹென்றி மார்டின், லூயிஸ் சாவேஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.

பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் 95-வது நிமிடத்தில் சவுதி அரேபிய வீரர் அல்தவ்சாரி கோல் அடித்தார்.

இறுதியாக இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

எனினும் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறின.


Next Story

மேலும் செய்திகள்