டெல்லி மேயர் தேர்தலுக்கான அறிவிக்கையை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

x
  • டெல்லி மேயர் தேர்தலுக்கான அறிவிக்கையை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில், 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 134 வார்டுகளிலும், பாஜக 104 வார்டுகளில் வெற்றி பெற்றது.
  • இதையடுத்து, நடைபெற்ற அமளி காரணமாக மேயர் தேர்தல் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டது.
  • இதனிடையே, மேயர் தேர்தலை உரிய காலத்துக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடக்கோரி, ஆம் ஆத்மி கட்சி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபேராய் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
  • இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.
  • சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவில், டெல்லி மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உரிமை இல்லை என்றது.
  • மேலும், மேயர் தேர்தலுக்கான அறிவிக்கையை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்