"இவளயா நீ காதலிச்ச" என இளக்காரமாக பேசிய.. பெண் மீது ஆசிட் அடித்த கணவனின் முன்னாள் காதலி..

x

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே, அழகு குறித்து கேலி செய்த பெண்ணின் மீது ஆசிட் வீசிச் சென்ற மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர். நாக்பூர் அருகே உள்ள வினோபா பாவே நகரில், தனது 2 வயது குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணின் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு பெண் ஒருவர், ஆசிட் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதில் 2 வயது குழந்தைக்கு கண்களை சுற்றிலும் காயம் ஏற்பட்ட நிலையில், தாய் மற்றும் மகன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் அந்தப் பெண்ணை போலீசார் கைது விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருமணத்திற்கு முன் ஆசிட் வீசிய பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை அந்தப் பெண் ஏற்க மறுத்ததாகவும், தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். தன்னை விட அழகில் குறைந்த பெண்ணை தனது கணவர் ஏன் காதலித்தார் எனக் கூறி, அந்தப் பெண்ணின் அழகை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்