ஓடும் காரில் பெண்ணிற்கு நடந்த கொடூரம் - குழந்தையை வீசிக் கொன்ற பயங்கரம் - ஓட்டுநரின் வெறிச்செயல்
மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய பெண் ஒருவர், 10 மாத குழந்தையுடன் கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அந்தக் காரில் சில ஆண் பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கார் சற்று தூரம் சென்ற பிறகு, அந்தப் பெண்ணை, சக பயணிகள் மற்றும் கார் ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். அப்போது, அழுதபடி இருந்த 10 மாத குழந்தையை, ஆத்திரமடைந்த ஓட்டுநர், ஓடும் காரில் இருந்து வெளியே வீசியுள்ளார். இதில் அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும், ஓடும் காரில் இருந்து அந்தப் பெண்ணையும், ஓட்டுநர் தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்தப் பெண்ணிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில், கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story