காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மதுரை ஆட்சியர் அலுவலகம்... களமிறங்கிய 50 போலீஸ்கள்

x

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்களைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களின் போது, சிலர் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்கும் விதமாக ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குறைதீர் கூட்டத்திற்கு வரக்கூடிய அனைவரும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள், கைப்பை அனைத்தும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குட்படுத்தப் படுகின்றன. குடிநீரைத் தவிர எண்ணெய், மருந்துகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், போராட்டங்களைத் தடுக்கும் வகையில் இயக்கங்கள், அமைப்புகள் சார்பில் 5 பேர் மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் வருகைதரும் போது பாலூட்டும் அறை இல்லாத நிலையில், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்