"சொன்னா கேளு, கேஸ வாபஸ் வாங்கிரு.. அதான் உனக்கு நல்லது" "என்ன 'குருத்திகா' ஃபுல் ட்ரெய்னிங்கா..?" "சபாஷ் பேபி சபாஷ்.. கடத்தப்பட்ட காதலியின் பரபரப்பு ஆடியோ
காதல் விவகாரத்தில் இளம்பெண் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி பெண் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
தென்காசி அருகே கொட்டாகுளத்தை சேர்ந்த வினித், குருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், பெண்ணின் வீட்டார் குருத்திகாவை வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், குருத்திகா கடத்தப்பட்டதாக கூறி வினித் போலீசில் புகாரளித்த நிலையில், நான் கடத்தப்பட வில்லை எனவும், எனது பெற்றோர்களுடன் பாதுகாப்பாக தான் இருக்கிறேன் எனவும் குருத்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், வினித்தை செல்போனில் தொடர்பு கொண்ட குருத்திகா, காவல்நிலையத்தில் தொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெறக் கோரி வலியுறுத்தும் ஆடியோ வெளியாகி பரவி வருகிறது.
Next Story