4 மாத கர்ப்பிணிக்கு 10 கணவர்கள்.. தோழி வீட்டுக்கு 9ம் கணவருக்கு ஷாக்.. வாழ்க்கை கொடுத்து வாழ்க்கை இழந்தார்..!

x
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவரது முகநூலில், 24 வயதான இளம்பெண் ஒருவர் தோழியாக அறிமுகமாகியுள்ளார்.
  • மெசஞ்ஜரில், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த பெண், வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்றும், பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லை என அனுதாபப்படும் வகையில் பேசியிருக்கிறார்.
  • அதன் பிறகு இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்தபோது, உங்களை காதலிக்கிறேன்..
  • கட்டுனா உங்களைத்தான் என மகாலட்சுமி கூற, அதனை நம்பி சம்மதம் தெரிவித்துள்ளார் அருள்ராஜ்.
  • பின்னர் பெற்றோர் முன்னிலையில், அருள்ராஜூக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
  • அதன் பிறகு, 4 மாதங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்...
  • பின்னர் திடீரென ஒருநாள், தான் கர்ப்பமாக இருப்பதாக அருள்ராஜிடம் கூறியுள்ளார் மகாலட்சுமி.
  • அதனைக் கேட்டு ஆனந்தமடைந்த அருள்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஐந்தாவது மாதத்தில் சீர்வரிசை எல்லாம் செய்து மகாலட்சுமியை குஷிப்படுத்தி உள்ளனர்.
  • இந்த நிலையில், பள்ளி தோழிக்கு உடல்நிலை சரியில்லை எனவும், சென்னைக்கு சென்று பார்த்து வருவதாகவும் அருள்ராஜிடம் மகாலட்சுமி கூறியுள்ளார்.
  • அதற்கு அருள்ராஜ் சம்மதம் தெரிவிக்கவே, அப்போது வீட்டில் இருந்த ஆறரை சவரன் தங்க நகை, 83 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை நேக்காக எடுத்துக்கொண்டு சென்றுள்ளர் மகாலட்சுமி.
  • போன மனைவி திரும்ப வராததால், பதறிப்போன அருள்ராஜ், மகாலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
  • ஆனால், அவரது இணைப்பை துண்டித்துள்ளார் காதல் மனைவி...
  • அதன் பிறகு திடீரென அருள்ராஜை தொடர்புகொண்ட மகாலட்சுமி, தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகக் கூறியதோடு, குழந்தையின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
  • பின்னர், குழந்தை இறந்துவிட்டதாகக் கூற, அதனையும் அருள் ராஜ் நம்பியுள்ளார்.
  • போன மனைவி வீட்டிற்கு திரும்பி வராமல் போனில் மட்டும் பேசி வருவதால், மகாலட்சுமி கொடுத்த முகவரிக்கு அருள்ராஜ் சென்றுள்ளார்.
  • ஆனால், அங்கு சென்று விசாரித்தபோது, அது போலி முகவரி என தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • பிறகு காதல் மனைவி குறித்து தீர விசாரித்தபோது, மகாலட்சுமியின் லிஸ்டில் இருந்த 9வது புருஷன் தான் என தெரியவரவே பதறிப்போனார் அருள்ராஜ்..
  • மேலும், 10வதாக, ஒருவரை மகாலட்சுமி திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக அருள்ராஜூக்கு தெரிய வந்துள்ளது.
  • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள்ராஜ், இந்த மோசடி குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்