காதல் தோல்வி..இளைஞர் விபரீத முடிவு.. ஜஸ்ட் மிஸ்ஸு..போலீஸ் வரலைனா..பரபரப்பாகிய மெரினா சாலை
சென்னை பட்டினப்பாக்கத்தில், காதல் தோல்வி காரணமாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள 4-வது மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார் மீட்டனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த 24 வயதாகும் சுனில் என்பவர், அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மெரினா லூப் சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு வளாகத்திற்குச் சென்றார். 4வது மாடி மேல்தளத்தின் பக்கவாட்டு சுவரின் மீது ஏறி நின்று, கையில் பெட்ரோல் கேனுடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழே அழைத்து வந்தனர். காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக சுனில் கூறியுள்ளார். இதையடுத்து, அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் அறிவுரை கூறி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.