பைக்கை தொலைத்து தனி ஒருவனாக...போராடிய இளைஞருக்கு கிடைத்த வெற்றி...பாயும் நடவடிக்கை..!

x

காணாமல் போன இருசக்கர வாகனம் முறைகேடாக விற்கப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த அமுதராஜ் என்பவரின் இருசக்கர வாகனம், கடந்த மாதம் 6ம் தேதி காணாமல் போனது.

ஆனால் அந்த வாகனம், இந்த மாதம் 10ம் தேதி, வேறொருவரின் பெயரில், கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஆர்டிஓ அலுவலகத்தில் தவறு நடந்துள்ளதாக அமுதராஜ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த, போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, வாகனத்தின் எந்த ஒரு அசல் ஆவணங்களும் இல்லாமல், போலி முகவரியில் வாகனம் பதிவு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட கடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரியும் பெண் கண்காணிப்பாளர் மற்றும் பெண் இளநிலை உதவியாளர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்