மரத்தடியில் கெத்தாக மது விற்பனை.."காவல் நிலையத்திற்கு காசு கொடுக்கிறோம்.." சிவகங்கை அருகே பரபரப்பு
சாலைகிராமத்தின் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் இயங்கி வரும் பாரில், காலை முதலே கள்ளச் சந்தையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தன. அதோடு மதுபானக்கடை அருகே ஓலை கொட்டகை போட்டு, பெட்டியில் வைத்துக்கொண்டு, மதுபானங்கள் விற்பனை செய்யபட்டு வருகின்றன. அதை விற்பனை செய்தவரிடம் கேட்டபோது, எங்களிடம் எல்லா வகையான சரக்கு இருக்கிறது, காஸ்ட்லியான சரக்கு கூட இருக்கிறது என்றார். காவல்நிலையம் முதல் அனைவருக்கும் பணம் கொடுத்து வருவதால் எங்களை யாரும் கண்டுக்க மாட்டாங்க என்று கூறுகிறார் அந்த விற்பனையாளர்.
Next Story