டாஸ்மாக் ஊழியரை தாக்கிய மதுப்பிரியர்கள்... பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் கேட்டதால் ஆத்திரம்...

x

டாஸ்மாக் கடைகளில் எம் ஆர் பி விலையை விட அதிகமாக பணம் வாங்குவதாக சமீபகாலங்களில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கிறது. அப்படித்தான் ஒரு 5 ஐந்து ரூபாய் அதிகமாக கேட்டவரை மண்டையில் கட்டோடு மருத்துவமனையில் படுக்க வைத்திருக்கிறது ஒரு கும்பல். தலையில் கட்டோடு, ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் இவர் நடராஜன். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த சிலர் ஒரு கோட்டரை வாங்கி இருக்கிறார்கள். அவரகளிடம் , நடராஜன் 5 ரூபாய் அதிகமாக கேட்டிருக்கிறார். ஆனால் மது வாங்கவந்தவர்கள் கூடுதல் பணம் தற மறுத்திருக்கிறார்கள்.

இதனால் இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுபிரியர்கள் நடராஜனை கடையில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு , மது பாட்டிலால் தலையில் அடித்திருக்கிறது.இதில் படுகாயமடைந்த நடராஜனை மீட்ட சக ஊழியார்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். பெரம்பலூரில் 5 ரூபாய் அதிகம் கேட்டவருக்கே இந்த நிலைமை என்றால், மதுராந்தகத்தில் பத்துரூபாய் அதிகமாக கேட்டதால் ஊழியர் ஒருவரை குடிமகன்கள் பந்தாடி இருக்கிறார்கள்...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பிண்ணபூண்டியில் உள்ள மதுக்கடை. அத்துவான காட்டுக்குள் இருக்கும் இந்த கடைக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும்.இந்த கடையில் நேற்று பாதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவர் வந்து பீர் , பிராந்தி என தேவையானதை வாங்கி இருக்கிறார்கள். பர்சசிங்கை முடித்துவிட்டு, எவ்வளவு ஆனது என கணக்கு பார்த்த போதுதான் விற்பனையாளர் 20 ரூபாய் அதிகமகா எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேட்ட போது, 10 பத்து ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டுமென கூறி இருக்கிறார் விற்பனையாளர். இதனால் இருதரப்புக்கும் மோதல் வெடித்திருக்கிறது, அப்போது மதுவாங்க வந்த இருவரும் விற்பனையாளரை நையப்புடைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காமராஜ், கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

அதிக பணம் கேட்டதால் ஆத்திரமடைந்து, உரிமை குரல் எழுப்பிய குடிமகன்கள் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் டாஸ்மாக் கல்லாபெட்டியில் இருக்கும் காசை கடனாக கேட்டு தொல்லை செய்திருக்கிறார் இங்கொரு போதை ஆசமி. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கண்ணன்.

ராமநாதபுரம் ஈசி ஆர் சலையில் இருக்கும் ஒரு டாஸ்மாக்கில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்திருகிறார். காலையில் பையோடு வேலைக்குச் சென்றவர் , தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் ஒயின் ஷாப்பே கதி என கிடந்த ஒரு போதை ஆசாமி கடை திறக்க வந்த கண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி இருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவு வழக்கம் போல கண்ணன் கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் 5000 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிச் சென்றிருக்கிறார். ஆனால் சிரிது நேரத்தில் முழு போதையில் வந்த அந்த நபர் கண்ணனிடம் 1000 ரூபாய் கடனாக கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணன் மறுத்துவிடவே இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டிருக்கிறது. வியாபாரம் தடைபடுவதால் பொங்கி எழுந்த சக குடிமகன்கள் அந்த போதை ஆசாமியை விரட்டி அடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த பகையை மனதில் கொண்டு மறுநாள்,அதே கடைக்கு கத்தியோடு வந்து கண்ணனின் வயிற்றில்குத்திவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதனால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரித்திருக்கிறார் கண்ணன். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசர் கீழக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவனை பிடித்து விசாரித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்