சென்னையை போல மதுரையிலும் மெட்ரோ... எங்கு இருந்து எங்கு வரை செல்லும்?... வெளியான மாஸ் தகவல்
சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பதற்காக, விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்காக, ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையிலிருந்து திருமங்கலம் வரையிலான 31 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 8 ஆயிரம் கோடி ரூபாயில் மெட்ரோ திட்டம் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story