லைஃப் மிஷன் முறைகேடு... "லூலூ குழுமத்திற்கு தொடர்பு- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
- கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளி சுவப்னா சுரேஷ், லுலு குழும அதிபர் யூசுப் அலி மீது குற்றஞ்சாட்டிய நிலையில், ஏழைகளுக்கு உதவும் போது பல குற்றச்சாட்டுகளை கேட்கும் நிலை ஏற்படும் என, யூசுப் அலி பதில் அளித்துள்ளார்.
- கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் நடந்த முறைகேட்டில், லூலு குழும அதிபர் யூசுப் அலிக்கும் தொடர்பு இருப்பதாக, சுவப்னா சுரேஷ் புகார் கூறினார்.
- இதற்கு பதில் அளித்துள்ள யூசுப் அலி, குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, சமூக வலைதளங்களில் மக்கள் பேசுவது தன்னையும் லுலு நிறுவனத்தையும் பாதிக்காது என கூறியுள்ளார்.
- லுலுவின் சட்டத் துறை அதை கையாளும் என்றும் அவர் துபாயில் கூறியுள்ளார்.
Next Story