முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றதும் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை
திமுக ஆட்சியில் புதிதாக எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு முறைப் பயணத்தை விமர்சித்து, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களைத் தான், தாங்கள் செய்ததாக திமுக அரசு கூறி வருவதாகக் குறிப்பிட்டு உள்ளார். 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வரும் என்று முதலமைச்சர் கூறியதாகவும், இது நடந்து முடிந்து 700 நாட்கள் ஆன பிறகும், முதலீடுகள் வந்ததாக தெரியவில்லை என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
Next Story