"என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்" - நடிகை குஷ்பு எச்சரிக்கை
தன்னை பற்றி அவதூறாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, பெண்கள் குறித்து தரக்குறைவாக பேச யாருக்கும் அனுமதி இல்லை என்றும், பெண்களை அவதூறாகப் பேச யார் உரிமை கொடுத்தார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள தனக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்ணுக்கு எவ்வளவு பிரச்னை இருக்கும் என்றும் தெரிவித்தார். பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதற்கு தைரியம் வரக்கூடாது என்றும், குஷ்பு குறிப்பிட்டார். தமது திறமையை மட்டுமே நம்பியிருப்பதாகவும், தன்னை சீண்டி பார்க்க வேண்டாம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
Next Story