KN நேரு, EVKS இளங்கோவன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோ.. "மார்பிங்.. சூழ்ச்சி" - அமைச்சர் பதிலடி

x

திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்...

சந்தேகம் இருப்பின் இந்த காணொலியைப் பார்க்குமாறு, அமைச்சர் நேருவும் - ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக் கொள்ளும் வீடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்...

சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக திமுக கூட்டணியில் களம் இறங்கியுள்ள இளங்கோவனுடன், அமைச்சர் நேருவும் தேர்தல் சம்பந்தமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வீடியோவைப் பகிர்ந்து பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று திமுக நம்புவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்