கிராம நிர்வாக அலுவலர் படுகொலை.."அரசு அலுவலருக்கே இந்த நிலையென்றால்..." "பாமர மக்களுக்கு..?" - ஈபிஎஸ் கடும் கண்டனம்
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில், இது போன்ற வன்முறை சம்பவங்கள் குறித்து, தொடர்ந்து எச்சரித்தும், தமிழக அரசு பாராமுகமாய் இருப்பதாகவும், மக்கள் மீதும் அரசு அதிகாரிகளின் மீதும் எந்த அக்கறையும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Next Story