6 வயது குழந்தையை கொன்று... பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூர் அருகே பயங்கரம்

x
  • திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வயது குழந்தையை கொலை செய்து பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேடு பகுதியை சேர்ந்தவர் கலையரசன்.
  • இவர் சென்னை ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஆறு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
  • இந்நிலையில், மாமனார் வீட்டில் வசித்து வந்த கலையரசன், சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் திருமணிக்குப்பத்தில் உள்ள மனைவியின் உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
  • அப்போது, பூட்டப்பட்ட அறையில் கலையரசன் மற்றும் நித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கிடந்த நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள் 6 வயது குழந்தையும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்