இதய நோயாளியுடன் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்... குறுக்கே ஓடிவந்த சிறுவனை தூக்கிவீசிய பயங்கரம்

x

கேரள மாநிலம் இடுக்கியில், இருதய நோயாளியுடன் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ், சாலையை ஓடி கடக்க முயன்ற 14 வயது சிறுவன் மீது மோதியதில், சிறுவன் படுகாயமடைந்தான். இடுக்கி மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஒன்று, இருதய நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக, கோட்டயம் நோக்கி அதிவேகத்தில் சென்றுள்ளது. அப்போது அடிமாலி ஜங்ஷன் பகுதியில், 14 வயது சிறுவன் ஒருவன் சாலையை ஓடி கடக்க முயன்ற போது, ஆம்புலன்ஸ் சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்