விபத்தால் முடங்கிய காதலனை கரம்பிடித்து வாழவந்த காதலி... உயிரை பிரித்து விளையாடிய விதி - மனதை உருக்கும் சம்பவம்

x

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவ‌ர் பிரணவ்... விபத்தில் சிக்கி சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்து வந்த இவரும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஹானா என்ற பெண்ணும் காதலித்தனர். தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பிரணவை, சஹானா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். பிரணவ்-சஹானா தம்பதியரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் பிரணவ் திடீரென உயிரிழந்துள்ளார். பிரணவின் உயிரிழப்பு நெட்டிசன்களை கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரணவின் பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்