எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! தங்கத்தை பசை போல் மாற்றி கடத்திய இளைஞர் - கையும் களவுமாக பிடித்த போலீசார்
- கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் வடகரையை சேர்ந்த முகமது சஃபுவான் என்பவர் வந்துள்ளார்.
- விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை போலீசார் கைது செய்து பரிசோதனை செய்த போது அவர் அணிந்திருந்த பனியன் மற்றும் பேண்டின் உள்பக்கத்தில் தங்கத்தை பசைபோல் மாற்றி தடவி இருந்தது கண்டறியப்பட்டது.
- சுங்கத் துறையினரின் சோதனையை மீறி அவர் கரிப்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது...
- போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலால் முகமது சஃபுவான் சிக்கிய நிலையில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பசை வடிவிலான தங்கத்தின் எடை 1 கிலோ 750 கிராம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த ஆண்டில் மட்டும் கரிப்பூர் விமான நிலையத்துக்கு வெளியே போலீசார் 12 தங்கக் கடத்தல் வழக்குகளைப் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story