டாஸ்மாக்-ஐ பாராட்டி சிறப்பித்ததால் சர்ச்சை - கேடயம், சான்றிதழ்-ஐ திரும்பப்பெற்றது மாவட்ட நிர்வாகம்
கரூர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட கேடயம், பாராட்டு சான்றிதழ் திரும்ப பெறப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு மது விற்பனையில் வருவாய் ஈட்டியதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
. இது குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட மேலாளர், இரண்டு மேற்பார்வையாளர்கள், ஒரு விற்பனையாளர் என நான்கு பேருக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.
டாஸ்மாக் பணியாளர்களும் அரசு துறையில் பணியாற்றுவதால் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாக, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் நிர்வாகத்தினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியது கண்டனத்திற்குரியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.