பரபரப்பை கிளப்பிய கரூர் ஐடி ரெய்டு - மாவட்ட எஸ்.பி அதிர்ச்சி விளக்கம்
- வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக எந்தவித முன் தகவலையும் மாவட்ட காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லை.
- சோதனைக்கு முன்பு வருமானவரித் துறையினர் பாதுகாப்பு கோரி மாவட்ட காவல்துறையினரிடம் பாதுகாப்பு கேட்பது வழக்கமாக நடைபெறும்.
- சோதனஒ நடைபெறுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஒன்பது இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- அசோக் வீட்டில் நடைபெற்ற பிரச்சனைக்கு பிறகு 2 ஏ.டி.எஸ்.பி. 5 டி.எஸ்.பி 11 காவல் ஆய்வாளர்கள் உட்பட 150 போலிசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- தற்பொழுது வரை எத்தனை இடங்களில் வருமான வரித்துறை என சோதனை நடத்தி வருகிறார்கள் என்கிற தெளிவான தகவலை காவல்துறையினிடம் தெரிவிக்கவில்லை.
- அசோக் வீட்டில் நடைபெற்ற பிரச்சனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளை பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளோம் வருமானவரித்துறை அதிகாரிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் பிரச்சனை ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்- கருர் காவல் கண்கானிப்பாளர்
- கரூரில் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வந்த பல்வேறு இடங்களில் அதிகாரிகளை திமுக தொண்டர்கள் விரட்டி அடித்ததால், 6 வாகனங்களில் வந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்
Next Story