10 வருடம் உடைந்த குடிசையில் வாழும் தம்பதி.. உதவிக்கரம் நீட்டிய கல்லூரி மாணவர்கள் - 'ஆஹா என்னா மனசு' சொல்ல வைக்கும் செயல்
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வறுமையில் வாடும் பழங்குடியின தம்பதிக்கு கல்லூரி மாணவர்கள் நிதி திரட்டி சிறு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.
- தடிக்காரன்கோணம் அருகே வெள்ளாம்பி மலை மீது அமைந்துள்ள பழங்குடியின கிராமத்தில் உம்மிணியான், குமாரி தம்பதியர் வாழ்ந்து வருகிறார்கள்.
- ஒக்கி புயலின்போது இவர்களின் குடிசை வீடு சேதம் அடைந்த நிலையில், அதை சீரமைக்க முடியாமல் அதே வீட்டில் வசித்து வருகிறார்கள்
- . இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லாத நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு உம்மிணியானுக்கு பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கிப் போனார்.
- இதனால், கிடைக்கும் சொற்ப வருமானமும் மருத்துவ செலவுக்கே போதாமல் இருப்பதால், போராடி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்
- இவர்களின் நிலையை அறிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்கள் நண்பர்களிடம் நிதி திரட்டி, இந்த தம்பதிக்கு சிறு வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.
- இந்த வீட்டை மாவட்ட வன அலுவலர் இளையராஜா, திறந்து வைத்து, மாணவர்களை பாராட்டியுள்ளார். தங்களை கவனிக்க யாருமில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பிள்ளைகளாக வந்து பாதுகாப்பான ஒரு வீடு கட்டி தந்ததற்கு தம்பதியர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story