கனிமொழி மேல்முறையீட்டு மனு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பேலா எம். திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது. கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வேட்புமனுவில், கணவரது வருமானத்தை தெரிவிக்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது. வாக்காளர்கள் தகவல்களை அறிந்துகொள்வது அடிப்படை உரிமை என
சந்தானகுமார் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
Next Story