தாய், தந்தையை இழந்த விரக்தி... மதுவில் விஷம் கலந்து குடித்த இளைஞர்...
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரிஷிவந்தியம் அருகே தகடி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன்.
- இவரின் பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
- இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், அரசு தேர்வுக்கு தயராகி வந்ததாக கூறப்படுகிறது.
- இதனிடையே, ராகவந்திரனுக்கு திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்த நிலையில், தாய், தந்தையை இழந்த சோகத்தில் இளைஞர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், திடீரென மதுவில் விஷம் கலந்து குடித்து ராகவேந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story