கள்ளக்குறிச்சி சம்பவம் - வெளியான புதிய தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி கலவரத்திற்கு முன்னதாக, வாட்ஸ்அப் குழு உருவாக்கி 400 பேரை உறுப்பினர்களாக சேர்த்து வன்மத்தை தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பள்ளி கலவர வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.
Next Story