முதலாவது MGR.. 7வது ஈபிஎஸ்.. இதுவரை அதிமுக கண்ட பொதுச்செயலாளர்கள் - யார்? யார்?

x
  • திமுகவில் இருந்து பிரிந்து... கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கமான அதிமுகவின் முதல் பொதுச்செயலாளர் எம்ஜிஆர் தான்.
  • எம்.ஜி.ஆரை தொடர்ந்து, திராவிட அரசியலில் தனது மாபெரும் பங்களிப்பிற்காக இன்றும் போற்றப்படும் நாவலர் நெடுஞ்செழியனுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
  • அவருக்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து தம்மை அதிமுகவில் இணைத்து, எம்.ஜி.ஆர் கால அதிமுகவில் முக்கிய தலைவராக திகழ்ந்த ப.உ.சண்முகம் அதிமுகவின் மூன்றாவது பொதுச்செயலாளரானார்.
  • அவருக்கு பிறகு 1972ல் எம்.ஜி.ஆர் அதிமுக தொடங்கிய போதே அவருடன் இணைந்து பயணிக்க தொடங்கிய எஸ்.ராகாவனந்தத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
  • பிறகு மீண்டும் 1986ல் அதிமுக பொதுச்செயலாளராக எம்.ஜி.ஆர் பதவியேற்ற நிலையில்,
  • 1987ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுப்பட்டு, மீண்டும் இணைந்த போது, 1989ல் அதிமுக பொதுச்செயலாளரானார், ஜெயலலிதா.
  • அன்று தொடங்கி அவரது மறைவு வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பயணித்தார்.
  • ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ல் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், சசிகலா.
  • ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என கூச்சல் குழப்பமாக நீடித்த பஞ்சாயத்துக்களுக்கு நடுவே, ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் கைகோர்த்ததால், பொதுச்செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு...
  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமையை கையில் எடுத்தது, அதிமுக.
  • இந்நிலையில், தான் கட்சிக்குள் வலுத்த ஒற்றை தலைமை கோஷத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுக்குழுவை நடத்தி, தீர்மானத்தை நிறைவேற்றி அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டுவரப்பட்டது.
  • 2022 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிய நிலையில், தற்போது வழக்குகளில் தீர்ப்புகள் தனக்கு சாதகமாக வரவே... அதிமுகவின் 7வது பொதுச்செயலாளராகியிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி.

Next Story

மேலும் செய்திகள்