இது கான்க்ரீட்டா.? தெர்மாகோலா..?"..கைகளால் சுரண்டினாலே உதிரும் அங்கன்வாடி கட்டடம்.. பெற்றோர் அதிர்ச்சி

x

வாணியம்பாடி அருகே, புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு ஊராட்சியில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அடித்தளம் மற்றும் தூண்கள் கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் தரமற்ற முறையில் இருப்பதாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டப்படும் இந்த கட்டடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்