பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - ஊராட்சி செயலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் - ஆட்சியர் அதிரடி
கள்ளக்குறிச்சியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஊராட்சி செயலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சோழவாண்டிபுரம் கிராமத்தில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட திட்ட இயக்குநர் மணி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வில், திட்ட பணிகளில் பல்வேறு முறைகேடு நடந்தேறி இருப்பது அம்பலமானது. இந்நிலையில், ஊராட்சி செயலாளர் பெருமாள், பணி பார்வையாளர்கள் கலைவாணி, கோவிந்தசாமி, கண்ணன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செலவு சீட்டு இல்லாமல், ஊராட்சி நிதியில் செலவீனம் செய்தது தொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் விளக்கமளிக்கவும் உத்தரவிட்டார்
Next Story