ஒரே மாதிரியான சம்பளத்தை நிர்ணயிக்க ,இடைநிலை பதிவு ஆசிரியர்கள் போராட்டம் | Chennai

x

சென்னை டிபிஐ வளாகத்தில், இடைநிலை பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2009ம் ஆண்டிற்கு பின்பு அரசு ஆரம்பப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு, அதன் முன்பு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை விட, மூன்று ஆயிரம் ரூபாய் குறைவாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாதிரியான சம்பளத்தை நிர்ணயிக்க கோரி, இடைநிலை பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தினர், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்