ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி, ஊழியர்கள் சாலை மறியல் - போலீசார் இடையே பயங்கர தள்ளு முள்ளு..
புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரியும் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் பொங்கல் இலவச பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பதிலாக அங்கன்வாடி மூலம் வழங்கப்படும் அறிவிக்கவோ ரேஷன் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், வெங்கட்ட சுப்பா ரெட்டியார் சதுக்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story