28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு - ராகுல் காந்தி போட்ட ட்வீட்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை, குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டுமென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம், சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தையொட்டி 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள், கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கின. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமரிடம் வழங்கினார். இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்றும், நாட்டின் பிரதமர் அல்ல என்றும் விமர்சித்துள்ளார். வரும் 28ஆம் தேதி ராகுல் காந்தி அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.