திருப்பூரில் மாறி மாறி தாக்கிய பாஜக மாநில நிர்வாகி, மாவட்ட தலைவர் - சட்டையை கிழித்து அடித்து கொண்டதால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் மாநில நிர்வாகியும், மாவட்ட தலைவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரத்தைச் சேர்ந்த கொங்கு ரமேஷ், பாஜக மாநில நிர்வாகியாக இருக்கிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்ட பாஜக தலைவரான மங்களம் ரவிக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து 'மனதின் குரல்' நிகழ்ச்சியை நேற்று கொங்கு ரமேஷ் ஏற்பாடு செய்து நடத்தினார். தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, நிகழ்ச்சி நடந்தபோது, கொங்கு ரமேஷை, மங்களம் ரவி தாக்கியுள்ளார். இருவரும் ஒருவரையொருவரை கட்டையால் துரத்தி துரத்தி கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story