"தொலைச்சுருவேன்...தொலைச்சு..." அமைச்சர், எம்.பி இடையே சண்டையில்... கலெக்டரை தள்ளி விட்ட பரபரப்பு காட்சிகள்
ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள நவாஸ் கனி எம்.பி.,க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே விழா தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த எம்.பி., மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி., இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கு இடையே நின்றிருந்த மாவட்ட ஆட்சியரை, எம்.பி.யின் ஆதரவாளர் ஒருவர் தள்ளிவிட்டதால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமைச் செயலரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story