மதுரையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகியின் பிறந்தநாள் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வருகிற நாடாளுமன்ற தேர்தலின் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்' என குறிப்பிட்டுள்ள அந்த போஸ்டர், நடிகர் விஜய்யின் தேர்தல் நகர்வை நிர்வாகிகள் முன்கூட்டியே வெளிப்படுத்துகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நடிகர் விஜய்யை வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு போஸ்டர் அடித்துவந்த ரசிகர்கள், தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை வருங்கால அமைச்சர்களாக குறிப்பிட்டு போஸ்டர் அடித்து வருகின்றனர்.
Next Story