சட்டவிரோதமாக கனிமவள கடத்தல். லாரி ஓட்டுநரை லாக் செய்த போலீஸ்

x

கரூர் மாவட்டம் கடவூர் அருகே சட்டவிரோதமாக கனிம வளங்களை கடத்திச் சென்ற லாரியை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இடையப்பட்டி மேற்கு கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் இருந்து 30 மெட்ரிக் டன் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கனிம வளங்களை கடத்திச் சென்ற லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஓட்டுநர் சுரேஷை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்