"நானும் ஸ்கூலுக்கு போறேன்.." "இனிமேல் எனக்கு பயமில்லை.." சிதைந்த முகம்.. உதவிய தமிழக அரசு

x
  • 9 வயது சிறுமி டானியா அரிய முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நமது தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.
  • இந்த சூழலில், அறுவை சிகிச்சைக்கு உதவிடுமாறு டானியா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
  • உடனடியாக சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
  • மோரையில் உள்ள சிறுமி டானியாவின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் நலம் விசாரித்தார்.
  • இந்நிலையில், சிறுமி டானியாவின் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி படிப்பிற்கு ஆகும் செலவினை முழுவதுமாக ஏற்று கொள்வதாக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் உறுதியளித்துள்ளார்.
  • அதன்படி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமி டானியாவை அழைத்து வந்து அருகில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கை சேர்த்தார்.
  • முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் சிறுமி டானியாவை நன்றாக கவனித்து கொள்ளும் படி பள்ளி நிர்வாகத்திடம் சுதர்சனம் அறிவுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்