"மலேசியாவில் கணவர் சித்ரவதை" - கண்ணீர் மல்க மனைவி கோரிக்கை

x

மலேசியாவில் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ள கணவரை மீட்டுத் தருமாறு தஞ்சாவூரில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குளிச்சப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண் மனு அளித்தார்.

அதில், எனது கணவர் விஜயராகவனை மலேசியாவின் தனியார் நிறுவனம் சித்ரவதை செய்து வருவாதாகவும், அந்த நிறுவனத்தில் இருந்து கடன் குறித்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தனது கணவரை விரைந்து மீட்டுத் தருமாறு கார்த்திகா கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்