"சொந்த ஊர் சென்ற மனைவி அடுத்த மனைவிக்கு ஏற்பாடு செய்த கணவர்"

x

தர்மபுரி மாவட்டம் பொன்னாகரம் அடுத்த ஆயாமரத்துப்பேட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி என்கிற ரேவதி. இவரும் எட்டிக்குழி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் சில வருடங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில், இருவரும் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், தனது தாய் மறைவையொட்டி சொந்த ஊர் வந்து ரேவதி தங்கியுள்ளார். இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த மஞ்சுளா என்பவரை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊர் திரும்பியதை கண்டு ரேவதி அதிர்ச்சியடைந்துள்ளார். இதை தட்டி கேட்ட ரேவதியை சாதி பெயர் கூறி திட்டி தாக்கியதாகவும், மஞ்சுளாவை தேடி வந்த அவரது தந்தை மற்றும் சகோதரர் தாக்கப்பட்டதாகவும் கூறி போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விஜயகுமார் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்