"அமெரிக்க அதிபர்" பதவியை ஏற்றதும் ஒபாமாவுக்கு வந்த சிக்கல்கள் முறியடித்து எழுந்தது எப்படி?

x

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபரான பராக் ஒபாமா பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில், 1961ல் பிறந்த பராக் ஒபாமா 1983ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சிகாகோவில் வழக்கறிஞராகவும், சமூக செயல் பாட்டாளாரகவும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி னார்.

2005ல் இலினாய் மாகாணத்தில் இருந்து செனட் சபை உறுப்பினராக ஜனனாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டார். 2009ல் அமெரிக்க அதிபர் தேர்தலில், வென்ற ஒபாமா பதவியேற்ற போது, அமெரிக்காவில் பெரும் மந்தம் உருவாகி,பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

ஒபாமா அமல்படுத்திய அமெரிக்க மீட்பு மற்றும் மறு முதலீட்டு சட்டம், வரி நிவாரணம், வேலையின்மைக்கான காப்பீடு திருத்த மசோதா ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்தது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளும் புதிய அணு ஆயுதங்கள் தயாரிப்பதை வெகுவாக குறைத்தார். ஈராக் போரில் அமெரிக்க ராணுவ செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தார். அதிபராக பதவியேற்ற முதல் ஆண்டி லேயே, அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவின் ஆணையின் பேரில், 2011ல் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின் லேடனை அமெரிக்க அதிரடி படையினர், பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றனர். இதற்காக உலகெங்கும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுகள் குவிந்தன.

2013ல் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றார். அவரது நிர்வாகம் ஒரே பாலின திருமணத் தடைகளை நீக்குமாறு, உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியது. இதன் விளைவாக 2015ல் ஒரே பாலின திருமணம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக் கப்பட்டது.

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடும் எதிர்ப்புகளிடையே முன்னெடுத்து, சட்டமாக்கி, சாதனை படைத்தார். இதன் மூலம் குறைந்த வருவாய் கொண்ட அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைக்க வழி பிறந்தது.

2017ல் அவரின் பதவி காலம் முடிந்த பின், பொது நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க அரசியலில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய பராக் ஒபாமா பிறந்த தினம் 1961, ஆகஸ்ட் 4.


Next Story

மேலும் செய்திகள்