மலம் மூலம் பரவும் கொடூர வைரஸ்..10 வயது சிறுவனை தாக்கியதால் அதிர்ச்சி - கேரளாவில் அலெர்ட்
கோழிக்கோட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு ஷிகெல்லா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கேரளா மாநிலம், கோழிக்கோடு அருகே காரசேரி பஞ்சாயத்தில் 10 வயது சிறுவன் ஒருவனுக்கு ஷிகெல்லா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வகை தொற்றின் முக்கியமான அறிகுறி, கடுமையான வயிற்றுப் போக்கு ஆகும்.
அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமாக பரவும் இந்த நோய்க்கு குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
மேலும், நோயாளிகளின் மலம் மூலமாக இந்த நோய் வேகமாக பரவும். காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, சோர்வு மற்றும் இரத்தம் கலந்து மலம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story