ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி
பரபரப்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்க நடிகர் அந்தோணி ராப், கெவின் ஸ்பேசி மீது தொடர்ந்த வழக்கில் ஆதாரங்களை நிரூபிக்கத் தவறி விட்டதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமெரிக்கன் ப்யூட்டி, த யூசுவல் சஸ்பெக்ட்ஸ், செவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி, 2 ஆஸ்கார்கள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
தான் 14 வயதாக இருந்த போது கெவின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் அந்தோணி ராப் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என 63 வயதான கெவின் மீதான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
Next Story