முடிய போகுது அரையாண்டு லீவு! சென்னை திரும்பும் மக்களுக்கு ஓர் அறிவிப்பு

x

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கோவை, திருச்சி, மதுரை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை TNSTC இணையதளத்தில் பயணிகள் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்