இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொடூர கொலை

x

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே, இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட துணை செயலாளரான இவர், ஜெய்ஹிந்த்புரம் அருகே நகைக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இவர் தனது கடை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர்கள், அரிவாள் மற்றும் கற்களைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான பின்னணி குறித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்