ஐகோர்ட் கருத்தால் கலக்கத்தில் மாணவர்கள்... என்னவாகும் லட்சக்கணக்கானோர் எதிர்காலம் ?

வீட்டு சூழலால் வேலை பார்த்துக்கொண்டே படிக்க முடியாதவர்களுக்கு வரபிரசாதமாக அமைந்தது, தொலைதூர கல்வி... வரபிரசாதமாக பார்க்கப்பட்டாலும், தனியார் வேலைவாய்ப்பில் இந்த பட்டங்கள் எல்லாம் வெறும் காகிதமே என்ற வேதனை தொடர்கிறது.
x

ஏதாவது ஒரு அரசு வேலைக்காவது உதவும் என நாடு முழுவதும் 42 லட்சத்து 86 ஆயிரத்து 923 மாணவர்கள் தொலைதூர கல்வியில் படித்து வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டும் இத்திட்டத்தில் 51 ஆயிரத்து 69 மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை பல்கலைக்கழகம் உள்பட பிற பல்கலைக்கழகங்களில் இத்திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்.

இப்போது இவ்வாறு தொலைதூர கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நேரடியாக சென்ற படித்த ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை கல்வித்துறை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை நீதிமன்றத்தில் பதிலளித்து இருக்கிறது.

இது லட்சக்கணக்கான மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய கல்வியாளர் சீனிவாச சம்பந்தம், ஏற்கனவே தகுதி தேர்வுகள் வாயிலாகவே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவதால், தொலைதூர கல்வியால் தரமில்லை என சொல்லிவிட முடியாது என்கிறார்


Next Story

மேலும் செய்திகள்