சென்னையில் அடித்து ஊற்றிய மழை .. ரோட்டையே மூழ்கடித்த வெள்ளம்.. மிதந்து சென்ற வாகனங்கள்

x

சென்னையில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் ஜி.பி.சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளது.Heavy rains in Chennai .. Floods that submerged the road .. Vehicles that floated away

சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, அண்ணா சதுக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மழையின் காரணமாக ஜிபி ரோடு சாலையில், முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி இருக்கிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இரு சக்கர வாகனங்கள் மழை நீரால் பழுதாகி நின்றது. மழை நீருடன் கழிவுநீரும் கலந்த நிலையில், ஜி.பி.சாலையில் உள்ள கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல், ராயப்பேட்டை எல்.பி ரோடு பகுதியிலும் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்